master movie latest updates

‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது!!

தளபதி விஜய் நடித்து வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியாகும் என்று படக்குழுவால் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வருவதாகவும் ஒரே நேரத்தில் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழுவால் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது..

மேலும் இப்படத்தை ஹிந்தி மொழியிலும் டப் செய்ய திட்டமிடப் பட்டதுடன் ஹிந்தி டப்பிங் உரிமத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பிரபல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மாஸ்டர் படம் தென்னிந்திய அளவில் மாபெரும் வசூல் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

தளபதி விஜய்யின் முதல் பான் இந்தியா படமாக ’மாஸ்டர்’ படம் இருக்கும் என்றும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதால் மிகப்பெரிய வசூல் சாதனை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது தயாராகியுள்ளநிலையில், அனேகமாக வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி தைப்பொங்கலை முன்னிட்டு வெளி வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

master movie latest updates