News · News Brief

சியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்!

‘டிமாண்டி காலணி’ திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விக்ரமை வைத்து ‘கோப்ரா’ எனும் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சீயான் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்கள் என்பதும் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

vikram Cobra movie updates

இந்நிலையில் ‘கோப்ரா’ படத்தின் அதிக பட்ச படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாகவும் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருக்கிறது. இது குறித்து ஓர் புகைப்படத்தை அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து மீண்டும் தொடங்கியது கோப்ரா என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க இருப்பதாகவும் படக்குழு தெரிவித்திருக்கிறது. விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இத் தகவல் விக்ரம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டீஸர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *