Dhanush 43 latest updates

‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்!

தனுஷ் நடிப்பில் ‘மாரி’ பட இயக்குனர் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘ஜகமே தந்திரம்’ போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாரான நிலையில் உள்ளது.

மேலும் இதை தொடர்ந்து தனுஷ் ‘அத்ராங்கே’ எனும் பாலிவுட் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் அடுத்து தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் அது தனுஷுக்கு 43 வது திரைப்படமாக உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது தனுஷின் 43 வது திரைப்படத்துக்கு 3 பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் 4வது நான்காவது பாடலையும் கம்போஸ் செய்யும் வேலையில் தற்போது இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியிடப்படும் என்றும், அத்தருணத்துக்காக ஆவலுடன் காத்திருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்து முடிவுறும் நிலையில் இருக்கும் பாலிவுட் திரைப்படமான ‘அத்ராங்கே’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ’தனுஷ் 43’ படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhanush 43 latest updates