தனுஷின் திறமைகளை புகழ்ந்த ‘ஜகமே தந்திரம்’ நடிகை

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

’ஜகமே தந்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சஞ்சனா நடராஜன் தனுசுடன் நடித்த அனுபவங்கள் குறித்து செவ்வி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் “தனுஷ் போன்ற மிகப் பெரிய நடிகருடன் முதன்முதலாக இணைந்து நடிக்கும் போது தனக்கு பதட்டமாக இருந்ததாகவும் ஆனால் அவர் தனது பதட்டத்தை போக்கி தனக்கு நம்பிக்கை அளித்ததாகவும்’ தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷின் முதல் நாள் படப்பிடிப்பை நாள் முழுவதும் உட்கார்ந்து பார்த்ததாகவும் முதல் டேக்’ஆக இருந்தாலும் மூன்றாவது டேக்’ ஆக இருந்தாலும் அவருடைய எனர்ஜி கொஞ்சம் கூட குறையாமல் இருப்பதை பார்த்து தான் ஆச்சரியப்பட்டதாகவும்’ தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் ’எந்திரன்’ படத்தில் வரும் ‘சிட்டி ரோபோட்’ போன்று எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக அவர் உள்வாங்கிக்கொண்டு நடிப்பதில் வல்லவர் என்றும் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் இந்த படத்தின் ’ரகிட ரகிட’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Jagame Thandhiram New Updates

Jagame Thandhiram New Updates