Sandy Master latest news

நடன இயக்குனரும் பிக் பாஸ் புகழுமான சாண்டியின் அடுத்த அவதாரம்!

நடன இயக்குனரும் பிக் பாஸ் புகழ் பெற்ற சாண்டி தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் அவருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் சரவணன், ரேஷ்மா ஆகிய இருவரும் இணைந்திருக்கிறார்கள் .

அறிமுக இயக்குனரானா சந்துரு இயக்கும் திரில்லர் கதை அம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் சாண்டி நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார்.

இப்படத்தில் மர்மமான முறையில் நடக்கும் ஓர் கொலை சம்பவத்தை சாண்டி கண்டுபிடிப்பதுவே இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சந்துருவின் சகோதரி தயாரிக்கும் இந்த படத்தில் ரமா, மைம்கோபி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். சதீஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Sandy Master latest news