விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்பதை அறிந்த அக் கிராம மக்கள் விஜய் சேதுபதியை பார்க்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது, முக கவசம் அணியாமல் ஒன்றுதிரண்டு நின்றது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்கிராமத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் விஜய் சேதுபதியையும் ஸ்ருதி ஹாசனையும் காண மக்கள் கூடம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தற்போது காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்படுகளோடு ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



Leave a Reply