Salpetta movie latest news

ஆர்யாவுடன் இணையும் பா.ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ‘சல்பேட்டா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக நடந்து வருவது அறியத்தந்ததே. இப்படம் வடசென்னை பகுதியில் உள்ள குத்துச்சண்டை வீரரின் கதையம்சம் கொண்டதால், இதற்காக ஆர்யா தனது உடல் கட்டமைப்பை அதற்கமைய கடும் பயிற்சி மூலம் மாற்றி அமைத்துள்ளார்.

ஆர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் துஷாரா நடித்து வருகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று தெருவித்திருக்கிறார்.

ஆர்யாவின் 30வது படமாக அமைந்திருக்கிறது சல்பேட்டா படம். இதில் முக்கிய கேரக்டரில் நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் கலையரசன் நடித்து வருகின்றனர்.