dhanush Atrangi Re movie updates

நடிகர் தனுஷை ‘தலைவா’ என்று அழைத்த பிரபல பாலிவுட் நடிகை!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவரையே ரசிகர்கள் ‘தலைவா’ என்று அழைப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிகர் தனுஷை தலைவா என்று கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.அத்திரைப்படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’தலைவா’ தனுஷுடன் ஜிம்மில் ஒரு பயிற்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.