master movie updates

திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் – மாஸ்டர் படக்குழு தகவல்

தளபதி விஜய் நடித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் தற்போது வெளிவர தாமதமான நிலையில் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதுடன் பொங்கல் தினத்தன்று இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளிவர இருப்பதாகவும் அதற்க்கான பேச்சுவார்த்தை ஓர் அளவு முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வரும் என்ற எதிர் பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்னும் தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் ‘மாஸ்டர்’ படக்குழு இந்த தகவல் குறித்தது தற்போது விளக்கம் அளித்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்று திட்டவட்டமாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது..

master movie updates
master movie updates