vikram - vijay sethupathi latest movies

விஜய் சேதுபதி கேரக்டருக்கு பதிலாக வில்லனாக மாறினாரா விக்ரம்??

திரையுலகில் ஒரே நேரத்தில் 10 படங்களுக்கும் மேலாக நடித்து வரும் ஒரே தமிழ் நடிகராக உயர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

அவற்றில் பாதிக்கும் மேலான படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய நடிகராக வலம் வந்துகொண்திருக்கிறார் என்பதும் மேலும் அவர் தற்போது ஒரு பாலிவுட் திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தென்னிந்திய நடிகர்களில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’ என்ற படத்திலே வில்லன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகின்றது.

‘புஷ்பா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆனா நிலையில் தற்போது திடீரென அப்படத்தில் இருந்து விலகி கொண்டார். இந்தநிலையில் விஜய் சேதுபதிக்கு பதிலாக அவரின் இடத்துக்கு வில்லன் கேரக்டரில் விக்ரம் நடிப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால் விக்ரம் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்கள்.

‘புஷ்பா’ படம் குறித்து வில்லனாக நடிக்க எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இது அனைத்தும் வதந்தியான தகவல் என்றும் விக்ரம் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ’புஷ்பா’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த வில்லன் கேரக்டரில் வேறு எந்த நடிகர் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

vikram - vijay sethupathi latest movies