Viswasam Anikha latest news

நாயகியாக அவதரித்தார் அஜித் பட குழந்தை நட்சத்திரம்!!

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் மகளாகவும் நடித்த பேபி அனிகா சுரேந்திரன் கடந்த சில மாதங்களாக தனது சமூக வலைத்தளங்களில் அழகிய வித்தியாசமான ஆடைகளில் தனது புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டு இருந்தார்.

அனிகா சுரேந்திரன் இவ்வாறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது அவர் சினிமாவில் நாயகியாக உருவெடுப்பதற்கான முயற்சியிலே இவ்வாறான பதிவுகளை மேற்கொண்டு வந்தார் என்பதும் அவரின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

அனிகா சுரேந்திரன் தற்போது தெலுங்கில் நடிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கப்பேல்ல’. இதில் அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மாத்யூ உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை முகமது முஸ்தபா இயக்கியிருந்தார்.

இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதை மலையாளத்தில் இயக்கிய முகம்மது முஸ்தபாவே தெலுங்கிலும் இயக்க உள்ளார் என்பதும் இதில் அன்னாபென் நடித்த முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரத்தில் நடித்த அனிகா தற்போது நாயகியாக தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் நாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Viswasam Anikha latest news