Bigg Boss Tamil · News · News Brief

ரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை – நிஷாவின் கணவர் ரியாஸ்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து அதிகமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துவரும் நிலையில், இந்தவாரம் போட்டியாளர் நிஷா வெளியேறலாம் என அதிகம் எதிர்பார்க்கடுகிறது.

இந்நிலையில் இன்னொரு ஊடகம் ஒன்றிக்கு செவ்வி வழங்கிய போட்டியாளர் நிஷாவின் கணவர் “என்னை பொருத்தவரை நிஷா இன்னும் விளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை, மேலும் ரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை, நமக்கு பசித்தால் நாம் சாப்பிட வேண்டியதானே” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “நிஷாவின் பாசம் போலி என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன், அவர் உண்மையாகவே எல்லோரிடமும் பாசத்தை பொழிவார், பிக்பாஸ் வீட்டில் ரியோ மட்டும் தான் அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் தம்பி என்ற முறையில் அவரிடம் பாசம் காட்டுகிறார், மற்றும்படி அவர் தன்னுடைய விளையாட்டை சரியாகத்தான் விளையாடுகிறார்” என்றும் நிஷாவின் கணவர் ரியாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *