tamil bigg boss 4 updates

பிக்பாஸ் வீட்டில் வெள்ளம் – நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு இன்று ஒளிபரப்பு – போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு சுமார் 9 ஆயிரம் கன அடி வினாடிக்கு திறந்துவிடப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ள ஈவிபி ஸ்டுடியோ முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டதாகவும், பிக்பாஸ் வீட்டில் கூட தண்ணீர் புகுந்து விட்டதாகவும் இதனால் போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது

அதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பூந்தமல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மழை நின்று விட்டதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

இதனால் தான் நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அவை இன்று ஒளிபரப்ப இருப்பதாகவும் இன்று இரவுக்குள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. ஒருவேளை தண்ணீரை வெளியேற்ற கால தாமதம் ஆனால் நாளைய நிகழ்ச்சியில் தடங்கல் ஏட்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

tamil bigg boss 4 updates