ENEMY movie updates

விஷால், ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில்!

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து ஓர் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில்,இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டைட்டில் ‘எனிமி’ என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் டைட்டில் குறித்து வெளியிடும் போது ‘எனது நெருங்கிய நண்பன் ஆர்யா இப்போது எனது “எதிரி” என்றும், இந்த போரில் அவரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விஷால், ஆர்யா இணையும் இப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும் மற்றும் ஆர்யாவிற்கு ஜோடியாக சமீரா ரெட்டியும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.