‘ஈஸ்வரன்’ படத்தில் பாம்பு – உண்மை நிலவரத்தை வனத்துறைக்கு அறிவித்த இயக்குனர்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிய ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற பாம்புக் காட்சி குறித்து வனத்துறையில் ஒருவர் புகார் கொடுத்ததை அடுத்து வனத்துறை ஈஸ்வரன் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதனைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இது குறித்து வனத்துறைக்கு விளக்கம் கொடுத்ததையடுத்து வனத்துறை அதிகாரிகள் சுசீந்திரனின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,, ஈஸ்வரன் படத்தில் சிம்பு பிடிப்பது ரப்பர் பாம்பு என்றும் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் நேரில் சென்று வனத்துறை அதிகாரிகளை சந்தித்து தாங்கள் படமாக்கிய காட்ச்சி கிராபிக்ஸ் பாம்பு தான் உண்மையான பாம்பு இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

மேலும் ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பில் சிம்பு பிடிப்பது போல் எடுக்கப்பட்ட காட்சியில் ரப்பர் பாம்பை வைத்து மிக தத்துரூவமாக நிஜ பாம்பு போல் வடிவமைத்த படக்குழுவுக்கு வனத்துறை அதிகாரி பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

simbu eswaran movie new updates