சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க சொல்லியும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதை நிறுத்த வேண்டும் எனவும் ’விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பாம்பு காட்சி எடுக்கப்படுவது விதிகளுக்கு எதிரானது என்றும், விலங்குகள் நலவாரிய அனுமதியின்றி பாம்பு காட்சி எடுக்கப்பட்ட்து தொடர்பாக 7 நாட்களுக்குள் படக்குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியத்தின் இந்த நோட்டீசால் ஈஸ்வரன் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply