News · News Brief

விஜய் சேதுபதியின் 8 படங்கள் வெளிவரத் தயார் நிலையில்!

தற்போது தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் அதிக திரைப்படங்களை நடிக்கும் வாய்ப்புக்களை பெறும் ஒரே நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தற்போது நடித்து வெளிவரத் தயார் நிலையில் உள்ள 7 திரைப்படங்களுடன் 8 வது திரைப்படத்தையும் முடித்துக்கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘மாஸ்டர்’ ‘மாமனிதன்’ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ‘லால்சிங் சாத்தா’, ‘கடைசி விவசாயி’ மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய ஆறு திரைப்படங்களும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றது.

இந்த நிலையில் அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘லாபம்’ படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கிறது. மேலும் விஜய் சேதுபதியும் அதில் கலந்து கொண்டுள்ளதையடுத்து படப்பிடிப்பும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் சில நாட்களில் இப்படம் முடிவடைவதுடன் அவரின் 8 வது திரைப்படமும் திரைக்கு வர தயாராகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக், பிக் பாஸ் புகழ் டேனியல் உட்பட பலர் நடித்து வருகின்றனர். எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாக்கி வரும் இப்படத்துக்கு இமான் இசையில் இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *