தாறுமாறாக ஓடிய சினேகன் கார் விபத்து – தப்பிக்க முயற்சித்ததாகவும் தகவல்

கவிஞராக ஏகப்பட்ட பாடல்களை எழுதி பிரபலமான சினேகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களை அதிகளவில் கட்டிப் பிடித்து கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தார்.

இந்நிலையில் தற்போது கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் இருக்கும் சினேகன், இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சாவேரியார்புரத்தில் தாறுமாறாக கார் ஓட்டி, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அருண் பாண்டி என்பவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு, சினேகன் அங்கிருந்து நழுவ முயற்சி செய்ததாகவும், இருந்தும் பின்னர், திருமயம் போலீசார், அவர் மீது விபத்து ஏற்படுத்தியது மற்றும் கவனக் குறைவாக வாகனம் ஓட்டிய பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

snehan bigg boss latest news