மீண்டும் இணையும் சூர்யா-கௌதம் மேனன், படப்பிடிப்பு தொடங்கியது

’காக்க காக்’க மற்றும் ’வாரணம் ஆயிரம்’ ஆகிய இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து, சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணையும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெப்தொடர் தொடர் ஒன்றில் மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணைந்து உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.