இணையத்தில் வைரலாகும் சிம்புவின் நீச்சல் தடாக புகைப்படங்கள்

தற்போது சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருவதை சமூக வலைத்தளங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

தற்போது சிம்பு கொரோனா விடுமுறைக்குள் 100 கிலோவுக்கு அதிகமாக இருந்த தனது உடற்பருமனை 70 ஆக குறைத்து ஸ்லிம் ஆக்கி சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது ஈஸ்வரன் படம் முடிவடைந்து டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சிம்புவுக்குரிய அனைத்து டப்பிங் வேலைகளையும் சிம்பு முடித்து கொடுத்துவிட்டார் என்பதும் குறுகிய காலத்தில் படத்தை முடித்துக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்றுமுன் சமூகவலைத்தளத்தில் சிம்பு பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு….