News · News Brief

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு உதவிய பிரபல நடிகர்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு திமுக எம்.எல்.ஏ சரவணன் அவர்கள் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புற்று நோயால் நடிகர் தவசி பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவியும், நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவியும் செய்துள்ளனர். மேலும் நிதி உதவி தேவை என்றால் தங்களை கேட்க்கும்படி தவசி குடும்பத்தினர்களுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சூரி தெரிவித்துள்ளனர்.

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகர்களின் உதவியால் தற்போது தவசி தேறி வருவதாகவும் விரைவில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan and soori helps to actor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *