ஜூலி போல் பொய் சொன்ன ரியோ – வைரலாகும் குறும்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்வில் போட்டியாளர்கள் ரியோவும் , பாலாஜியும் மீண்டும் மோதிக்கொண்டனர்.

போட்டியாளர் பாலாஜி “காதை கிழித்துவிடுவேன் ” என சொன்னதாக ரியோ கடும் கோபமுற்றார். இந்நிலையில் இது குறித்த குறும்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் குறித்த நேரத்தில் பாலாஜி அப்படி கூறியதாக எந்த பதிவும் இருக்கவில்லை.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் 4 இன் ஜூலி தான் இந்த ரியோ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த பிக் பாஸ் 1இல் ஜூலியும் போட்டியாளர் ஓவியா கூறியதாக கூறி சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், அவருக்கு குறும்படம் போட்டு காட்டப்பட்டமையும், அந்த 5 செகண்ட் என்கிற சொல்லும் பிரபலமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.