கார்த்தியின் அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்

கார்த்தி தற்போது நடித்து முடிவுற்று இருக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரும் பொங்கலுக்கு வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

கார்த்தி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் இரும்புக்குதிரை, ஹீரோ ஆகிய படத்தை இயக்கிய பிஎஸ் மித்திரன். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் பூஜையை தீபாவளி தினத்தன்று ஆரம்பித்ததோடு பாடல் பதிவையும் ஆரம்பித்துள்ளார்கள். இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறியத்தந்திருக்கிறார்கள்.

Karthi new movie details