சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நடிப்பு குறித்து டப்பிங் கலைஞர் வெளியிட்ட கருத்து

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘சூரரைப்போற்று’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஊடகங்களும் திரை ரசிகர்களும் இத்திரைப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்து வரும் காட்சி ஒன்றில் டப்பிங் கொடுத்துள்ள பிரபல டப்பிங் கலைஞர் நவீன் முரளிதர் திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்தில் “அப்துல்கலாம் ஐயா குரலில் பேசுவதற்கு தனக்கும் இந்த படத்தில் வாய்ப்பு தந்த சூர்யா அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் ஐயா அவர்களின் குரலில் பேச வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமைப்படுகிறேன்”

“மேலும் சூர்யா அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று யாரோ சொல்லியிருந்தார்கள், உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியாது, ஆனால் இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்து காட்டி இருக்கின்றார்’ என்று கூறியுள்ளார். நவீனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.தெரிவித்துள்ளார்.

soorarai pottru updates