சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’ என்பது அனைவரும் அறிந்ததே இந்தநிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஈஸ்வரன் படத்தில் சிம்புவின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் வரும் தீபாவளி அன்று டீசரும் வெளியாக இருப்பதால் சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும் ஆர்வத்திலும் காத்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி இன்று முதல் முறையாக ஈஸ்வரன் படத்தின் நாயகி நிதி அகர்வால் சிம்புவுடன் இருக்கும் போஸ்டரும் அதனுடன் ஒரு சில போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் பாரதிராஜாவும், குடும்பத்துடன் சிம்புவும் இருக்கும் ஸ்டில், சிம்புவும் சுசீந்திரனும் இருக்கும் ஒரு ஸ்டில் என இன்று வெளியாகியிருக்கும் ஸ்டில்கள் அனைத்தும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



