‘சூரரைப் போற்று’ திரைப்படம் பற்றி முன்னணி இயக்குனரின் விமர்சனம்

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக நாளைய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்படத்தை அடுத்து இன்று ஓடிடி இல் அந்த படத்தை பார்க்கலாம்..

இந்நிலையில் திரையுலகத்தின் சில பிரபலங்கள் முன்கூட்டியே அந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றார்கள். அந்த வகையில் பிரபல வெற்றிப்பட இயக்குனர் பாண்டிராஜ் ‘சூரரைப் போற்று’ படத்தைப்பார்த்து சூர்யா உட்பட படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

‘சூரரைப் போற்று’ படம் பார்க்கும் போது எனக்கு ஓர் புதிய அனுபவமாகவே உணர்ந்ததாகவும், சூர்யா சிறப்பாக நடித்துள்ளதாகவும் ஒவ்வொரு கேரக்டரும் இதயத்தைத்தொடும் வகையில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் சுதா கொங்கராவின் கடுமையான உழைப்பைக் காணக்கூடியதாகவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பெரிய பலமாக அமைந்திருப்பதுடன் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த தீபாவளி விருந்தாகவே அமைந்திருப்பதாக குறிப்பிட்டதுடன் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.