ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா?

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும் என்ற தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திரைப்படம் குறித்து பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதில் முன்னதாக நயன்தாரா, அண்ணாத்த படத்தில் வழக்கறிஞராக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிப்பதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் முறைப் பெண்களான குஷ்புவும், மீனாவும் அவரை திருமணம் செய்ய போட்டி போடுகிறார்களாம். இருவரின் மனதையும் புண்புடுத்த வேண்டாம் என ரஜினி நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறாராம்.

நயன்தாரா, ரஜினி தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகளாக்க குஷ்புவும், மீனாவும் பின்னர் போட்டி போடுகிறார்களாம். அந்த போட்டியால் ஏற்படும் பிரச்சனைகளும், சிக்கல்களும் தான் படத்தின் கதை என தகவல்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Annaatthe Movie Updates

Annaatthe Movie Updates