திரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திரையரங்கு

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது. இருப்பினும் இன்று முதல் எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளி வராத நிலையில் எதிர் பார்க்கப்படும் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வரவில்லை. இதையடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நவம்பர் மாதம் முழுவதும் விபிஎப் கட்டணத்தை பெற்றுக்கொள்வதாக கியூப் அறிவித்துள்ளதால் தீபாவளி தொடக்கம் புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கம் போல திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கடலூரை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தீபாவளி வரை ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

tamil cinema latest news