simbu returns

ரசிகர்களுக்கு மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு !

தற்போது சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருவதை சமூக வலைத்தளங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

தற்போது சிம்பு கொரோனா விடுமுறைக்குள் 100 கிலோவுக்கு அதிகமாக இருந்த தனது உடற்பருமனை 70 ஆக குறைத்து ஸ்லிம் ஆக்கி சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது ஈஸ்வரன் படம் முடிவடைந்து டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சிம்புவுக்குரிய அனைத்து டப்பிங் வேலைகளையும் சிம்பு முடித்து கொடுத்துவிட்டார் என்பதும் குறுகிய காலத்தில் படத்தை முடித்துக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது சிம்புவின் ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியது..

இந்நிலையில் ஏற்கனவே சிம்பு, ஹன்ஷிகா இணைந்து நடித்த ‘மஹா’ திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிம்பு தனது படங்களை அடுத்தடுத்து கொடுப்பதன் மூலம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

simbu returns