உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஓர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இது கமல்ஹாசனுக்கு 232 வது படமாக அமைகிறது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தநிலையில் இத்திரைப்படத்துக்கு ‘விக்ரம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 1986 இல் கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இப்படத்தின் டீஸர் ஒன்று வெளிவந்துள்ளது. அந்த டீசரில் வேட்டி சட்டையுடனும் கோர்ட் சூட் அணிந்திருப்பவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரி போன்றோருடன் அமர்ந்து அசைவ உணவு படையலுடன் மாஸான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். அவ் டீஸர் பார்க்கும் போதே தெரிகிறது கைதி திரைப்படத்தை விட மாறுபட ஒரு மாஸான திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கிறார் என்பது.