தர்ஷனுக்கு எதிராக சனம் ஷெட்டி தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கலந்துகொடுள்ள போட்டியாளர்களின் ஒருவரான சனம் ஷெட்டி, பிக் பாஸ் 3இல் கலந்துகொண்ட தர்சனுடன் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கடந்த சீஸனின் போது தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் தர்சன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதை நம்பி, அவருடைய முன்னேற்றத்துக்கு பல லட்சம் செலவு செய்த நிலையில், தர்சன் பிரபலம் அடைந்த பின்னர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, சமூகவலைத்தளங்களில் தன்னையும், குடும்பத்தையும் இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம்ச்சாட்டினார்.

மேலும் இது தொடர்பாக அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், புகார் மீது காவல் நிலையத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், சனம் செட்டி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் மூன்று வாரத்துக்குள் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணை விபரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

sanam shetty tharsan case details