மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், டிரைலர் பற்றி இயக்குனர் வெளியிட்ட தகவல்!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தும், கொரோன வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக வெளிவராத நிலையில் வரும் 16ம் தேதி திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து விரைவில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

latest master vijay movie updates

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர், டிரைலர் எப்போது வரும் என்ற கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் டீசர், டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவர சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் டீசர், டிரைலர் இரண்டுமே தயாராக இருப்பதாகவும் அவை வெளிவரும் பட்சத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.