rajinikanth biography movie

தனுஷை வைத்து ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க விரும்பும் பிரபல இயக்குனர்

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படங்களாக உருவாக்கும் முயற்சியில் பல முன்னணி இயக்குனர்கள் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜனியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஆனந்தம், ரன், சண்டைக்கோழி, பையா, வேட்டை போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.

மேலும் ரஜனியின் காரெக்டருக்கு தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்றும் அவரின் ஸ்டைலும் தனுஷுக்கு நன்றாகவே வரும் என்றும் அந்த நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். அவரின் இந்த ரஜினியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு ரஜினி ஒப்புதல் தருவாரா? அதில் நடிப்பதற்கு தனுஷ் விரும்புவாரா? லிங்குசாமியின் ஆசை நிறைவேறுமா? என்பதை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

rajinikanth biography movie