ஆரியிடம் சிக்கிய பாலாஜி – இணையத்தில் வைரலாகும் குறும்படம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் சட்டசபை போன்று பெரும்பான்மை எந்த பக்கமோ, அந்த பக்கமே தீர்ப்பு என்கிற விசித்திரமான நீதிமன்ற டாஸ்க் பிக் பாஸ் வீட்டினுள் சென்றுகொண்டிருக்கிறது.

மேலும் தற்போது போட்டியாளர்கள் ஆரி மற்றும் பாலாஜிக்கு இடையிலே கடும் வாக்கு வாதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்கள் சார்பாகவும் பல குறும்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அந்தவகையில், நேற்றைய நீதிமன்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாலாஜி கூறிய ஒரு வார்த்தை மியூட் செய்யப்பட்டது. இதனால் அவர் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் நெட்டிசன்கள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் முன்னுக்கு பின் முரணாக பாலாஜி பேசுவதாகவும் குற்றச்சாட்டப்படுகிறார்.

சில நாட்கள் முன் பாலாஜி ஹீரோவாக இருந்த நிலையில் தற்போது அவர் பார்வையாளர்களுக்கு வில்லனாக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வைரல் வீடியோ…