இவர் தான் எனக்கு பொருத்தமான ஜோடி – நடிகர் ராணா

தெலுங்கில் 2010-ல் வெளியான லீடர் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராணா டகுபதி, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிக பிரபலமானார்.

தற்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்து வரும் ராணா டகுபதி தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும்ராணா, ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்துவந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்க இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் இந்த நிலையில் அடுத்த மாதம் 8-ந்தேதி திருமணம் நடக்க இருப்பதை ராணா உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராணா ““என் வாழ்க்கையில் மிஹீகா நுழைந்தது நல்ல தருணம். அவர்தான் எனக்கு பொருத்தமான ஜோடி. ஆகஸ்டு 8-ந்தேதி எங்கள் திருமணம் நடக்க உள்ளது. அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Rana Daggubati- Miheeka

Rana Daggubati- Miheeka