எத்தனை வைல்ட்கார்ட் எண்ட்ரி? – 4வதாக களமிறங்கும் போட்டியாளர் ஷிவானிக்கு நெருக்கமானவராம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே களமிறங்கிய போட்டியாளர்களுடன் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா களமிறங்கியுள்ளநிலையில், அடுத்த வைல்ட்கார்ட் எண்ட்ரியாக மீடு பிரபலம் மற்றும் பிரபல பாடகியும் ரேடியோ ஆர்ஜேவுமான சுசித்ரா வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் 4 இன் 3வது வைல்ட் கார்டு என்ட்ரியாக விஜயின் பிகில் பட நடிகையும் , ரோபோ ஷங்கரின் மகளுமான இந்திரஜா ஷங்கர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், 4வது வைல்ட் கார்டு என்ட்ரியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியலில் போட்டியாளர் ஷிவானியுடன் நடித்த நடிகர் முகமது அசீம் களமிறங்கவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் முகமது அசீம் போட்டியாளர்கள் தனிமை படுத்தப்படும் குறித்த ஹோட்டலில் இருந்து புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். பாலாஜிக்கு முடிவு கட்டவே இறுதிநேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

bigg boss tamil 4 MOHAMED AZEEM