க/பெ. ரணசிங்கம் பட இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க.பெ. ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பினை பெற்றது.

அதனைத்தொடர்ந்து படத்தின் வெற்றிக்காக இயக்குனர் விருமாண்டிக்கு தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர். ஸ்டுடியோஸ் உரிமையாளர் ராஜேஷ் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

புதிய காருடன் இயக்குனர் விருமாண்டி தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.