200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் அனில் முரளி காலமானார்

இந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் நடிகர் அனில் முரளி தனது 56 வயதில் காலமானார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தஇவர் 1993-ம் ஆண்டு வெளியான ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 6 கேண்டில்ஸ், நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, கணிதன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 மற்றும் இறுதியாக வால்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

நடிகர் கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அனில் முரளி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Anil Murali Passed away

Anil Murali Passed away