வெற்றிமாறன் படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமானவர் ஒப்பந்தம்

தமிழ் திரையுலகில் முன்னணி வகிக்கும் இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது பிரபல காமெடி நடிகரான சூரியை வைத்து ஓர் படத்தை இயக்கி வருகிறார். இந்தநிலையில் அடுத்து சூர்யாவை வத்து ‘வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து விஜயை வைத்து இயக்கவிருக்கும் இயக்குனர் பட்டியலில் வெற்றிமாறனின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படம்குறித்து தகவல் வெளிவந்துள்ளது. வெற்றிமாறனின் கதை, திரைக்கதையில் இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமான ஓர் அறிவிப்பை விடுத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் பற்றிய தகவலை மிக விரைவில் அறியத்தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் மற்றும் கதிரேசன் அவர்களின் பைவ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. வெற்றிமாறனுடன் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் மூன்றாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

tamil cinema news