மூன்றாவது வைல்ட்கார்ட் எண்ட்ரி – களமிறங்கும் பிகில் பட நடிகை!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஏற்கனவே களமிறங்கிய போட்டியாளர்களுடன் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா களமிறங்கியுள்ளநிலையில், அடுத்த வைல்ட்கார்ட் எண்ட்ரியாக மீடு பிரபலம் மற்றும் பிரபல பாடகியும் ரேடியோ ஆர்ஜேவுமான சுசித்ரா வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் 4 இன் 3வது வைல்ட் கார்டு என்ட்ரியாக விஜயின் பிகில் பட நடிகையும் , ரோபோ ஷங்கரின் மகளுமான இந்திரஜா ஷங்கர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமை படுத்தப்பட்டுள்ள இந்திரஜா , குறித்த ஹோட்டலில் இருந்து புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆனால் இந்திரஜா சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறாரா இல்லை போட்டியாளராக களமிறங்குகிறாரா என்பது ஓரிரு நாட்களில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indraja Shankar bigg boss tamil 4 3rd wildcard
Indraja Shankar bigg boss tamil 4 3rd wildcard
Indraja Shankar bigg boss tamil 4 3rd wildcard
Indraja Shankar bigg boss tamil 4 3rd wildcard
Indraja Shankar bigg boss tamil 4 3rd wildcard