நேற்றைய பிக் பாஸ் முதல் ப்ரோமோ நீக்கப்பட்டதுக்கான சர்ச்சைக்குரிய காரணம்? – தொடர்ந்து சர்ச்சையை கிளப்பும் பாலாஜி

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடர்ந்து இம்முறையும் சில போட்டியாளர்கள் சர்ச்சைக்குரிய வழியில் நடந்துகொண்டாலும், போட்டியாளர் பாலாஜி போட்டிகளை தாண்டி வன்மத்துடன் நடந்து வருவதாக ரசிகர்களினால் குற்றம்ச்சாட்டப்பட்டு வருகிறார்.

அண்மையில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடிதம் எழுதும் டாஸ்கில் சனம் ஷெட்டி சில அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் Miss South India வெற்றி பெற்றார் என பாலாஜி கூறியதாக எழுதி புகார் பெட்டியில் போட்டுள்ளார்.

இதனை அவதானித்த நெட்டிசன்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டுவந்த நிலையில், குறிப்பிட்ட நேற்றைய முதல் புரொமோவை விஜய் தொலைக்காட்சி நீக்கியுள்ளனர்.

மேலும் பாலாஜியின் நடவடிக்கைள் போட்டி என்பதுக்கு அப்பால், மனித தன்மை அற்று இருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

Vote For Our Bigg Boss surveys and follow us on twitter