சுதா கொங்காரா வீட்டு கல்யாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தால் வெளியான சூர்யாவின் அடுத்தப்பட லுக் படங்கள் இதோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது சூர்யா தனது அடுத்த படத்துக்காக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்திருப்பதும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதும் முன்கூட்டியே அறியத்தந்ததே. இந்தப் படத்தில் சூர்யா வித்தியாசமான லுக்கில் தோன்ற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சுதா கொங்காராவின் மகளின் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைப்பெற்றது. இந்த திருமணத்திற்கு மணிரத்னம், சுஹாசினி, ஜிவி பிரகாஷ் உள்பட பலர் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். இந்த திருமணத்தில் சூர்யாவும் கலந்து கொண்டிருந்தார்.

இத்திருமணத்தில் கலந்து கொண்ட சூர்யா நீளமான முடியுடன் வித்தியாசமான லுக்கில் தென்பட்டார், அத்திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இதையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

suriya new lokk photos
suriya new lokk photos
suriya new look photos