கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி மூடப்பட்ட திரையரங்கங்கள் வரும் 10 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் திரையரங்குகள்திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்கப்படுவதனால் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து சற்று முன் கருத்து வெளியிட்டுள்ள மாஸ்டர் பட சக தயாரிப்பாளர் லலித் குமார் ‘மாஸ்டர்’ படம் தீபாவளிக்கு வெளிவராது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ‘மாஸ்டர்’ படம் பொங்கல் தினத்தன்று வெளியிடுவதைப் பற்றி கால சூழ்நிலையை வைத்தே முடிவு செய்யப்படும் என்று சக தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளார்.
தீபாவளிக்கு தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்காவது வெளிவர வேண்டும் என்பது தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
