சூர்யா தனது அடுத்த படங்கள் பற்றி கொடுத்த தகவல்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்புக்குரிய படமாக உருவாகியிருக்கும் சூரரைப்போற்று வரும் தீபாவளி தினத்தன்று ஓடிடி இல் வெளியாக இருப்பது அறிந்ததே,

இந்நிலையில் சூர்யா தனது அடுத்து தான் நடிக்க இருக்கும் மூன்று படங்கள் பற்றி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மனந்திறந்திருக்கிறார். சூர்யா நடிக்க இருக்கும் 39 வது திரைப்படம் ‘நவரசா ‘ என்ற ஆந்தாலஜி திரைப்படம் என்பதும் , அதனை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் படம் என்றும் அதன் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

எனவே சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையிலே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya