பிக் பாஸ் நமக்கு ஏற்ற இடமில்லை – ரியோவின் மனைவி வெளியிட்ட வைரல் பதிவு

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் எதிர்பார்க்கப்பட்ட பல போட்டியளார்கள் சொதப்பி வரும் நிலையில், எதிர்பார்க்காத சில போட்டியாளர்கள் ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருகின்றனர்.

அந்தவகையில் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ரியோ, பிக் பாஸ் வீட்டில் களமிறங்கியவுடனேயே ரசிகர்களால் விஜய் டிவி குடும்ப முத்திரை குத்தப்பட்டுவிட்டார். மேலும் தொடர்ந்து இடம்பெற்ற ரியோவின் செயட்பாடுகள் காரணமாக ரசிகர்கள் சலிப்படைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து ரியோ பிக் போஸ்சில் குறிப்பிட்ட சிலருடன் சேர்ந்து குரூப்பிஸம் செய்துவருவதையும் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து வருத்தம் அடைந்துள்ள ரியோவின் மனைவி ஸ்ருதியும், ” இது நமக்கான களமில்லை போல் ” என சமூகவலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் எதுவாக இருந்தாலும் நான் உன்னை மிஸ் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ரசிகர்களும் பிக் பாஸ், ரியோவுக்கான களமில்லை என கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

bigg boss tamil 4 new updates