பாரதிராஜா மகன் இயக்கும் முதல் படம்

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாம்சங்களில் வெற்றிப்படங்களை குவித்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்த ஓர் இயக்குனர் இமயமாக திகழ்பவர். தற்போது அவரின் மகன் மனோஜ் ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் ஓர் படத்தை இயக்க தயாராகியிருக்கிறார்.

லிப்ரா புரொடக்ஷன் தயாரிக்கும் ஏழாவது திரைப்படமான இதன் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி மிகவிரைவில் அறியத்தருவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் அடுத்த வருடம் 2021 இல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மனோஜ் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் 2 வது பாகத்தை திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இத்திரைப்படம் அந்த திரைப்படமா?? இல்லை வேறு கதாம்சம் கொண்டதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

manoj bharathiraja new movie details