‘மஹா’ திரைப்படத்துக்காக பிரபல நடிகருக்கு நன்றி சொன்ன ஹன்சிகா

ஹன்சிகா, சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ’மஹா’. இது ஹன்சிகாவுக்கு ஐம்பதாவது படம். இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து, அதனை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

தனது 50-வது திரைப்படமான ’மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ஹன்சிகா, இந்த படம் சிறந்த படமாக இருந்தது என்றும் இந்த பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சிம்புவுக்கு மிகப்பெரிய நன்றி என்றும் பதிவு செய்துள்ளார்.

hansikas50th movie updates