அட்லீயின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் அந்தகாரம்’ என்ற டைட்டிலில் உருவாகி வந்த படத்தை விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கி வந்தார்.

இத்திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரான நிலையில் விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது. நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ‘அந்தகாரம்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

andhakaram movie updates