Bigg Boss Tamil · News · News Brief

அறுபத்தைந்திலும் அசத்தல் ஸ்டைல் – இணையத்தில் வைரலாகும் கமலின் போட்ஷூட் படங்கள்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் நடிகர் கமல்ஹாசனின் 232ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது தெரிந்தததுவே. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் போட்டோஷுட் சமீபத்தில் நடந்ததாகவும் பிக்பாஸ் கெட்டப்பிலேயே அவரது போட்டோஷூட் இருந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த போட்டோஷூட்டின் ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.

மேலும் வரும் நவம்பர் ஏழாம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வரவிருப்பதை அடுத்து இந்த போட்டோஷூட்டின் இன்னும் ஒரு சில புகைப்படங்கள் அதிகாரபூர்வமாக வெளிவரலாம் என்றும் அதுமட்டுமின்றி ’கமலஹாசன் 232’ படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Kamal Haasan new viral photoshoots

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *