பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இருந்தும் பிக் பாஸ் 3 இல் கலந்துகொண்ட லொஸ்லியா குறித்த பல தகவல்கள் இன்றளவும் சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்களினால் வைரல் ஆக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் லொஸ்லியாவின் திருமணம் குறித்த தகவல் ஒன்று கனடாவில் கசிந்துள்ளது. அதாவது லாஸ்லியாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளார்களாம். கனடாவில் உள்ள தனது நண்பரின் மகனை லாஸ்லியாவின் தந்தை திருமணத்திற்கு பேசி முடித்துள்ளதாகாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தை தரப்பில் இருந்து முன்னெடுக்கப்பட்ட இந்த திருமண பேச்சை, திரைத்துறையில் கவனம் செலுத்திவரும் லொஸ்லியாவும் ஏற்றுக்கொண்டாரா என்கிற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Losliya Mariyanesan